Saturday, July 12, 2008

பிக்ஷாம் தேகி


நாம் செல்லும் சில இடங்களில் அல்லது சில பொழுதுபோக்கும் இடங்களில் பிச்சை எடுக்கும் சிலர் நிச்சயமாக இருப்பார்கள். அவர்கள் அங்கு இருக்கும் அனைவரிடமும் பிச்சை கேட்ப்பார்கள் ஒருவரையும் விடமாட்டார்கள். ஒருசிலர் தன்னிடம் இருக்கும் சில்லறையில் ஐம்பது பைசாவில் இருந்துஒருரூபாய் வரை போடுவார்கள். நிச்சயமாக ஒரு ரூபாய் தாண்டாது. அவர்களிடம் இல்லை என்றால் இல்லை என்று சொல்லி நன்றாகவே அவர்களை அனுப்பிவிடுவார்கள். பெரும்பாலான மக்கள், எதற்காக பிச்சை எடுக்கவேண்டும் ஏதாவது வேலை செய்யலாமே அதனால் காசுபோடாதீர்கள் என்று சொல்லி தாங்களும் போடாமல் பிறரையும் தடுத்து விடுவார்கள். நாம்போடும் காசினால் அவன் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்றும் அல்லது அந்தகாசை தப்பாக பயன்படுத்தி விடுவார்கள் என்றும் அவர்கள் நினைப்பது உண்டு. அதனால் கூட இவர்கள் பிச்சையை ஊக்குவிப்பதில்லை.

ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் ஒருவர் பிச்சை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவர் எத்தனை துன்பங்களுக்கு ஆட்பட்டு இருக்கவேண்டும். யோசித்து பாருங்கள் நாம் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் பிச்சை எடுக்க மனம் வருமா, நிச்சயமாக வராது. அவர்கள் பிச்சை எடுக்க கூச்சப்படவில்லை என்றால் , அவர்கள்அவமானத்தில் மொத்தத்தையும் பார்த்துவிட்டார்கள் என்று பொருள். பிச்சை ஒன்றும் தப்பானகாரியமல்லவே , ஆதி காலத்தில் நாம் கடவுளாக போற்றும் முனிவர்கள் பலபேர் பிச்சை எடுத்துதான் தங்கள் வாழ்க்கையை கடத்தியிருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் பிச்சை நிச்சயமாகே வயிற்றுக்குத்தான். நாம் போடும் ஒருரூபாயில் அவர்கள் பணக்காரர்கலாகபோவதும் இல்லை, நாம் போடும் ஒரு ரூபாயால் நாம் ஏழையாக போவதும் இல்லை. சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்று நீங்கள் தராமல் இருந்தால் அவர்கள் நிறுத்திக்கொள்ள போவதும்இல்லை. அவர்கள் அடுத்தவனிடம் சென்று கேட்க்கத்தான் போகிறார்கள். நாம் வாரத்தில் ஒரு ஐந்துபேருக்கு ஒரு ரூபாய் விகிதத்தில் ஐந்து ரூபாய் தானம் செய்வோமா, நிச்சயமாக மாட்டோம். இங்கே நான் குறிப்பிட்டது அதிக தொகைதான். ஆகவே நாம் ஐம்பதுகாசுகள் குடுப்பது தப்பில்லை என்றுஎனக்கு தோன்றுகிறது. அதனால் அவன்பசி அடங்கும் என்றால் தாராளமாகதரலாம். யோசித்து பாருங்கள் எத்தனை ரூபாய்க்களை உபயோகமில்லாமல் செலவளிதுக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக கை தொலைபேசிக்கு எத்தனை செலவு, அதனை நீங்கள் உபயோகமாக பேசியிருப்பீர்களா. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நாமாகசென்று யாருக்கும் தானம் செய்யபோவதில்லை. அதற்க்கு நமக்கு நேரமும் இருக்கபோவதில்லை. அவர்களாகவந்து கேட்க்கும்பொழுது சிறியதாககுடுத்து பெரியதாக ஆனந்தம் அடையலாமே.

இங்கு குறிப்பிட்டவை அனைத்தும் என்னுடைய கருத்துக்களே ஆகும். உங்கள்கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவும்.

Friday, July 11, 2008

தனிமனித ஒழுக்கம்


நாம் முதலில் ஒழுக்கத்தை பற்றி பார்ப்போம் , ஒழுக்கமென்பது நிச்சயமாக பிறருக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்வதே ஆகும். இரண்டு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று பிறரை உடல் ரீதியாக பாதிப்பது மற்றொன்று மனரீதியாக பாதிப்பது. முதலில் சொன்னதாவது பலமுள்ள ஒருவன் பலவீனமாணவனை அடிப்பது போன்று. இரண்டாவது சொன்னதானது பிறரை வாய் பேச்சால் மனதை புண்படுத்துவதாகும். இவ்விரண்டும் நடக்காமல் இருப்பதென்பது சாத்தியமற்றது. ஏனெனில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருக்கும்வரை ஒருவன் ஆதிக்கம் செலுத்துவது நிச்சயம். இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று நான் சொன்னது பணத்தில் மட்டுமல்ல அனைத்திலுமே இரண்டு வகை உண்டு அல்லவா அதை குறிப்பிட்டேன். தனிமனிதன் எங்கெங்கெல்லாம் ஒழுக்கமாக இருக்கவேண்டுமென்று எவ்வளவோ உதாரணம்கள் இருக்கின்றன. பெண் ஆணிடம், ஆண் பெண்ணிடம், மகன் தந்தையிடம், பெற்றோர்கள் குழந்தைகளிடம், பெரியோர்கள் சிரியோர்களிடம், மாணவர்கள் பெரியோர்களிடம் , என்று இன்னும் எத்தனையோ. அதில் ஒன்றானது ஒரு கல்லூரி மாணவன் தனியாக வீதியில் அல்லது பேருந்தில் செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம் , அப்போது அவன் எந்த பெண்ணையும் கிண்டல் செய்வதில்லை , எந்த பெரியவரையும் கேலி செய்வதில்லை , பிற மாணவர்களிடம் வம்பு சண்டைக்கு போவதில்லை. அதே மாணவன் தன் சகமாணவர்களுடன் சேர்ந்து அதே போல் வீதியிலோ அல்லது பேருந்திலோ செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவன் மேற்சொன்ன அனைத்தையும் செய்வான் சந்தேகமின்றி. அப்பொழுது தனிமனிதனாக இருக்கும் போது அவனிடம் இருந்த ஒழுக்கம் கூட்டமாக இருக்கும் போது இருப்பதில்லை. அது இயல்பும் கூட. இது அனைத்து மாணவர்களும் செய்வதே. அதற்க்காக கூட்டமாக இருக்கும் போதும் ஒழுக்கமாக இருக்கும் மாணவர்கள் இல்லாமலில்லை. தனிமனிதனாக இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிப்பது சுலபம். கூட்டமாக இருக்கும் போது கடைபிடிதீர்கலானால் பிறருக்கு அது சொவ்கர்யமாக இருக்கும்.

இறுதியாக, தனிமனித ஒழுக்கமென்பது பிறரை ஆனந்தமாக வைத்துக்கொள்வது அல்ல. பிறருக்கு தொல்லை தராமல் நம் வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டுசெல்வதே ஆகும். ஒவ்வொரு தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமாகமாறி நாது நலம் பெரும்.