Saturday, July 12, 2008

பிக்ஷாம் தேகி


நாம் செல்லும் சில இடங்களில் அல்லது சில பொழுதுபோக்கும் இடங்களில் பிச்சை எடுக்கும் சிலர் நிச்சயமாக இருப்பார்கள். அவர்கள் அங்கு இருக்கும் அனைவரிடமும் பிச்சை கேட்ப்பார்கள் ஒருவரையும் விடமாட்டார்கள். ஒருசிலர் தன்னிடம் இருக்கும் சில்லறையில் ஐம்பது பைசாவில் இருந்துஒருரூபாய் வரை போடுவார்கள். நிச்சயமாக ஒரு ரூபாய் தாண்டாது. அவர்களிடம் இல்லை என்றால் இல்லை என்று சொல்லி நன்றாகவே அவர்களை அனுப்பிவிடுவார்கள். பெரும்பாலான மக்கள், எதற்காக பிச்சை எடுக்கவேண்டும் ஏதாவது வேலை செய்யலாமே அதனால் காசுபோடாதீர்கள் என்று சொல்லி தாங்களும் போடாமல் பிறரையும் தடுத்து விடுவார்கள். நாம்போடும் காசினால் அவன் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்றும் அல்லது அந்தகாசை தப்பாக பயன்படுத்தி விடுவார்கள் என்றும் அவர்கள் நினைப்பது உண்டு. அதனால் கூட இவர்கள் பிச்சையை ஊக்குவிப்பதில்லை.

ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் ஒருவர் பிச்சை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறார் என்றால் அவர் எத்தனை துன்பங்களுக்கு ஆட்பட்டு இருக்கவேண்டும். யோசித்து பாருங்கள் நாம் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் பிச்சை எடுக்க மனம் வருமா, நிச்சயமாக வராது. அவர்கள் பிச்சை எடுக்க கூச்சப்படவில்லை என்றால் , அவர்கள்அவமானத்தில் மொத்தத்தையும் பார்த்துவிட்டார்கள் என்று பொருள். பிச்சை ஒன்றும் தப்பானகாரியமல்லவே , ஆதி காலத்தில் நாம் கடவுளாக போற்றும் முனிவர்கள் பலபேர் பிச்சை எடுத்துதான் தங்கள் வாழ்க்கையை கடத்தியிருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் பிச்சை நிச்சயமாகே வயிற்றுக்குத்தான். நாம் போடும் ஒருரூபாயில் அவர்கள் பணக்காரர்கலாகபோவதும் இல்லை, நாம் போடும் ஒரு ரூபாயால் நாம் ஏழையாக போவதும் இல்லை. சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்று நீங்கள் தராமல் இருந்தால் அவர்கள் நிறுத்திக்கொள்ள போவதும்இல்லை. அவர்கள் அடுத்தவனிடம் சென்று கேட்க்கத்தான் போகிறார்கள். நாம் வாரத்தில் ஒரு ஐந்துபேருக்கு ஒரு ரூபாய் விகிதத்தில் ஐந்து ரூபாய் தானம் செய்வோமா, நிச்சயமாக மாட்டோம். இங்கே நான் குறிப்பிட்டது அதிக தொகைதான். ஆகவே நாம் ஐம்பதுகாசுகள் குடுப்பது தப்பில்லை என்றுஎனக்கு தோன்றுகிறது. அதனால் அவன்பசி அடங்கும் என்றால் தாராளமாகதரலாம். யோசித்து பாருங்கள் எத்தனை ரூபாய்க்களை உபயோகமில்லாமல் செலவளிதுக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக கை தொலைபேசிக்கு எத்தனை செலவு, அதனை நீங்கள் உபயோகமாக பேசியிருப்பீர்களா. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் நாமாகசென்று யாருக்கும் தானம் செய்யபோவதில்லை. அதற்க்கு நமக்கு நேரமும் இருக்கபோவதில்லை. அவர்களாகவந்து கேட்க்கும்பொழுது சிறியதாககுடுத்து பெரியதாக ஆனந்தம் அடையலாமே.

இங்கு குறிப்பிட்டவை அனைத்தும் என்னுடைய கருத்துக்களே ஆகும். உங்கள்கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவும்.

Friday, July 11, 2008

தனிமனித ஒழுக்கம்


நாம் முதலில் ஒழுக்கத்தை பற்றி பார்ப்போம் , ஒழுக்கமென்பது நிச்சயமாக பிறருக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்வதே ஆகும். இரண்டு விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று பிறரை உடல் ரீதியாக பாதிப்பது மற்றொன்று மனரீதியாக பாதிப்பது. முதலில் சொன்னதாவது பலமுள்ள ஒருவன் பலவீனமாணவனை அடிப்பது போன்று. இரண்டாவது சொன்னதானது பிறரை வாய் பேச்சால் மனதை புண்படுத்துவதாகும். இவ்விரண்டும் நடக்காமல் இருப்பதென்பது சாத்தியமற்றது. ஏனெனில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருக்கும்வரை ஒருவன் ஆதிக்கம் செலுத்துவது நிச்சயம். இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று நான் சொன்னது பணத்தில் மட்டுமல்ல அனைத்திலுமே இரண்டு வகை உண்டு அல்லவா அதை குறிப்பிட்டேன். தனிமனிதன் எங்கெங்கெல்லாம் ஒழுக்கமாக இருக்கவேண்டுமென்று எவ்வளவோ உதாரணம்கள் இருக்கின்றன. பெண் ஆணிடம், ஆண் பெண்ணிடம், மகன் தந்தையிடம், பெற்றோர்கள் குழந்தைகளிடம், பெரியோர்கள் சிரியோர்களிடம், மாணவர்கள் பெரியோர்களிடம் , என்று இன்னும் எத்தனையோ. அதில் ஒன்றானது ஒரு கல்லூரி மாணவன் தனியாக வீதியில் அல்லது பேருந்தில் செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம் , அப்போது அவன் எந்த பெண்ணையும் கிண்டல் செய்வதில்லை , எந்த பெரியவரையும் கேலி செய்வதில்லை , பிற மாணவர்களிடம் வம்பு சண்டைக்கு போவதில்லை. அதே மாணவன் தன் சகமாணவர்களுடன் சேர்ந்து அதே போல் வீதியிலோ அல்லது பேருந்திலோ செல்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவன் மேற்சொன்ன அனைத்தையும் செய்வான் சந்தேகமின்றி. அப்பொழுது தனிமனிதனாக இருக்கும் போது அவனிடம் இருந்த ஒழுக்கம் கூட்டமாக இருக்கும் போது இருப்பதில்லை. அது இயல்பும் கூட. இது அனைத்து மாணவர்களும் செய்வதே. அதற்க்காக கூட்டமாக இருக்கும் போதும் ஒழுக்கமாக இருக்கும் மாணவர்கள் இல்லாமலில்லை. தனிமனிதனாக இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிப்பது சுலபம். கூட்டமாக இருக்கும் போது கடைபிடிதீர்கலானால் பிறருக்கு அது சொவ்கர்யமாக இருக்கும்.

இறுதியாக, தனிமனித ஒழுக்கமென்பது பிறரை ஆனந்தமாக வைத்துக்கொள்வது அல்ல. பிறருக்கு தொல்லை தராமல் நம் வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டுசெல்வதே ஆகும். ஒவ்வொரு தனிமனித ஒழுக்கமும் சமுதாய ஒழுக்கமாகமாறி நாது நலம் பெரும்.

Monday, June 23, 2008

கேளுங்க கேளுங்க ...ரசீது கேளுங்க


வசதிபடைத்தவர்கள் பொருட்க்கள் வாங்கும் இடங்களிலெல்லாம் கணினி மூலம் ரசீது கட்டாயம் கொடுத்து விடுவார்கள். இவர்களும் கட்டாயம் வாங்கிக்கொள்வார்கள். நடுத்தர மக்களில் சிலர் எதை வாங்கினாலும் கடைக்காரரிடமிருந்து ரசீது வாங்கிக்கொள்வார்கள், ஆக இவ்விருவருக்கும் இக்கட்டுரை தேவைபடாது. பொருட்க்களை வாங்கி அதற்க்குண்டான பணத்தையும் கொடுத்து ரசீது வாங்க விரும்பாத அல்லது அதை வாங்கினால் என்ன ஆகிவிடபோகிறது என்று நம்மில் பலபேர் நினைப்பதுண்டு. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால் மருந்து வாங்கும் கடைகளில் நாம் அனைவரும் மருந்து சீட்டு கொடுக்கிறோம் அதில் உள்ள அனைத்து மருந்தும் கடைக்காரன் கொடுக்கிறான், நீங்கள் அதற்க்கு நிகரான பணம் கொடுக்கிறீர்கள் பிறகு அந்த மருந்து சீட்டையும் மருந்தையும் வீட்டுக்கு கொண்டு போகிறீர்கள். மருந்துகளுக்கு நீங்கள் கொடுத்த பணத்திற்கு ரசீது வாங்குவதில்லை . இது உதாரணம் மட்டுமே. இதுபோல எத்தனையோ இடங்களில் நாம் ரசீதுகளை வாங்க மறந்துவிடுகிறோம். நான் ரசீது வாங்கவில்லை எனக்கு அது தேவையும் இல்லை இதனால் நாட்டிற்கு என்னவாயிற்று என்று நீங்கள் கேட்க்கலாம். நீங்கள் வாங்கிய போருட்க்களுக்கு ரசீது வாங்கவில்லை என்றால் அது கணக்கில் வராது. கணக்கில் வரவில்லை என்றால் அரசாங்கத்துக்கு முழுமையாக வரவேண்டிய வரிப்பணம் குறைந்துவிடும் . அரசாங்கத்துக்கு வரிப்பணம் வரவில்லை என்றால் போகட்டும் எனக்கென்ன என்கிறீர்களா , வரிப்பணத்தை கொண்டுதான் அரசாங்கம் மக்களின் தேவியாகளை பூர்த்தி செய்யவேண்டியிருக்கிறது. இது ஒன்றும் கடினமான காரியமொன்றும் அல்லவே காசு கொடுக்கிறோம் பொருட்க்களை வாங்கிறோம் அதற்க்குண்டான ரசீது கேட்க்கிறோம். எந்த கடைக்காரனும் ரசீது தரமுடியாது என்று சொல்வானா, நிச்சயம் மாட்டான். நீங்கள் கேட்க்கவில்லை அதுதான் உண்மை.

ஆகையால் கேளுங்கள் கேளுங்கள் ரசீது கேளுங்கள்.

Saturday, June 21, 2008

குழந்தைகளும் புத்தக மூட்டையும்

















விடுமுறை
முடிந்து அனைவருக்கும் பள்ளிகள் கல்லூரிகள் திறந்து விட்டன. வீதிகளில் எங்கு பார்த்தாலும் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லும்கூட்டம் தென்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் என்னை பாதித்த ஒன்றானது ஒரு சிறுவன் ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் பருவம்தான். தன் முதிகில் ஒரு மூட்டையை சுமந்துக்கொண்டு வளைந்து நெளிந்து ஒடமுயற்சிக்கிறான் அந்த சுமை அவனை நடக்கத்தான் அனுமதித்தது. அந்த சுமையானது அவன் வயதுக்கும், உடலுக்கும் மீறியது. சுமை சுமை என்று நான் சொன்னது புத்தகங்களைத்தான். புத்தகங்கள் எப்படி சுமை ஆகலாம் என்று நீங்கள் கேட்க்கலாம் பொதுவாக சிறுவர்கள் பள்ளிகளுக்கு போகவேண்டுமேன்றாலே மிகப்பெரிய சங்கடம் அவர்கள்ளுக்கு தாய் தந்தை அழுத்தத்தினால்தான் குழந்தைகள் பள்ளிகளுக்கு போக காரணம் மற்றபடி குழந்தைகள் விருப்பப்பட்டு அல்ல. அவர்கள் பள்ளிக்கு போவதையே முழுமனதோடு செய்வதில்லை அதிலும் அத்தனை சுமையை சுமந்துகொண்டு என்றால் யோசித்துப்பாருங்கள். அதற்க்காக பள்ளிக்கு போகவேண்டாமா படிக்கவேண்டமா என்றுதானே உங்கள் அடுத்தக்கேல்வி, நிச்சயமாக பள்ளிக்குப்போகவேண்டும் நன்றாக படிக்கவேண்டும் கூட. நான் சொல்ல விரும்பியது ஒன்றுதான் இக்குழந்தைகள் சுமந்துக்கொண்டு போகும் அத்தனை புத்தகங்களுக்கும் பள்ளியில் பாடம் எடுக்கப்போவதில்லை அதில் பாதிக்குத்தான் வேலை மிச்சமுள்ள புத்தகங்கள் இவர்களுக்கு சுமையாக வந்தவைதான். சரி அதற்க்கு நாம் என்ன செய்யவேண்டும் , நீங்கள் வெளிநாடுகளில் பள்ளிகளில் பார்த்தீர்களானால் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் இதர படிப்பு சம்பந்தப்பட்ட வஸ்துக்களை வைப்பதற்க்காக பாதுகாப்பு பெட்டி (லாக்கர் என்போமே அதுதான் )போன்று ஒன்றை அவர்களுக்கு குடுக்கிறார்கள். அதில் அவர்கள் தங்கள் பொருட்க்களை வைத்துக்கொண்டு வேண்டியதை பள்ளிகளுக்கும் வீட்டிற்கும் கொண்டுசெல்வார்கள், நான் சொன்ன பாதி சுமை பள்ளிகளில் பத்திரமாக இருந்துவிடும் , நம் பிள்ளைகளின் முதிகில் ஏறி கழுத்தை நேரிக்கது. இதற்க்கு தீர்வு என்பது நாம் எடுக்கும் முயற்சியில்தான் இருக்கிறது. புத்தகங்களை பள்ளிகளில் வைத்து தேவையான புத்தகங்களை மட்டும் உபயோகபடுத்தும் வசதியை கொண்டு வாருங்கள் என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும், உங்கள் பிள்ளை பள்ளி என்றால் புத்தகங்கள் சுமக்க வேண்டுமே என்ற பயம் நீங்கி பள்ளியை நோக்கி நடக்கக்கூடாது ஓடவேண்டும் . பள்ளிகளிலும் இதுபோன்ற நல்ல திட்டங்களை உருவாக்கி குழந்தைகளுக்கு படிப்பு பாரமாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Friday, June 20, 2008

கனவுகாண்க நாடுநலம்பெற வேண்டுமென்று கனவுகாண்க.



நாடு நலம்பெற வேண்டுமென்று கனவு கண்டால்மட்டும் போதுமா அது நடந்தேறிட உழைக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் உண்மையான உழைப்பும் நாடு வலம் பெற்று நலம்பெற உதவும்.

உழைப்போம், உயர்வோம்.

ஜெய் ஹிந்த்.